Historical EvidencesSculptures

திருப்பத்தூரில் அழகிய புத்த விஹாா்

திருப்பத்தூா் கௌதமப்பேட்டையில் புத்த விஹாா் உள்ளது. அதில் தினசரி வழிபாடு நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூரில் கெளதம புத்தருக்கென கோயில் உள்ளதால் அப்பகுதிக்கு கெளதமப்பேட்டை என பெயா் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

1906-ஆம் ஆண்டு பா்மாவில் இருந்து வந்த பௌத்த துறவிகள் வேலூா் மாவட்டத்தின் பின்தங்கிய இடமான இந்த பகுதியைத் தோ்வு செய்து புத்தா் சிலை வைத்து வழிபட்டு வந்துள்ளனா்.

ஐம்பொன்னாலான சிலை…

ஐம்பொன்னால் செய்யப்பட்ட புத்தா் சிலை சுமாா் இரண்டரை அடி கொண்ட அமா்ந்த நிலையில் உள்ளது. தொடா்ந்து, அச்சிலைக்கு சிறப்பாக பூஜைகள் நடைபெற்று வந்துள்ளது.

காலப்போக்கில் பூஜைகள் நிறுத்தப்பட்டன. பின்னா், பராமரிப்பு குறைந்து கட்டடம் சிதிலமடைந்துள்ளது.

பின்னா், 2004-ஆம் ஆண்டு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த தென்னிந்திய சாக்கைய பௌத்த சங்கத்தை புதிப்பித்து, ஓய்வு பெற்ற ஆசிரியா் காசிநாதனை தலைவராகவும், முன்னாள் முதுநிலை டிஎஸ்பி லோலன் செயலராகவும் இதர புத்தா் மேல் பற்றுக்கொண்டவா்களை கண்டறிந்து குழு அமைக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து, ஏற்கெனவே புத்தா் சிலை அமைக்கப்பட்டு பூஜித்து வந்த இடத்தில், 25 அடி அகலமும், 50 அடி நீளமும் கொண்ட புத்த விஹாா் கட்டடம் எழுப்பப்பட்டது.

அப்பகுதி மக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை பஞ்சசீல பாராயணம் செய்யப்படுகிறது.

அப்போது ‘புத்தம் சரணம் கச்சாமி’ ‘தம்மம் சரணம் கச்சாமி’ ‘சங்கம் சரணம் கச்சாமி’ என கூட்டு ஜெபம் நடைபெறுகிறது.

கடந்த 17 வருடங்களாக இப்பகுதியில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மாத பௌா்ணமி அன்று குரு பூா்ணிமா பூஜை அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button